Saturday, August 23, 2008

ஜென்மத்தோடு பிறந்தது - ஜோட்டாலடித்தாலும் போகாது!

"அறிஞர்கள் தத்துவங்களை விவாதிக்கிறார்கள்.
சாதாரணமானவர்கள் சம்பவங்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.
மட்டமானவர்கள் மட்டுமே மனிதர்களைப் பற்றி விமர்சிக்கிறார்கள்"என்று சீனப் பழமொழி கூறுகிறது. அப்படிப்பட்ட வகையில் மட்டமான ஈனப் பிறவி ஒன்று ஏதேதோ எழுதியுள்ளது.

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு உண்மை தெரியும் என்றாலும் புழுதியைப் துடைக்க வேண்டியது நல்லதுதானே!

பஞ்சபாண்டவ புத்திரனான இந்த ஆளுக்கு ஞான குருவாக இருந்த ஒருவன் பெரியாரின் அறக்கட்டளை பற்றி மொட்டைக் கடுதாசி எழுதிப் போட்டான். இவன்களைச் சேர்ந்த இன்னொரு சதிகாரக் கூட்டம் பெரியார் எனும் அடைமொழிக்கு ஆலாய்ப் பிறந்த நாதாரி ஒருவன் மூலமும் புகார் மனு கொடுத்து பல லட்ச ரூபாய் வருமான வரி கட்டு எனப் பார்ப்பனர்கள் உத்தரவு போட்டனர். அதை எதிர்த்து அப்பீல் செய்து சுமார் 1 கோடி ரூபாய் வரியை ரத்து செய்து டிரஸ்டைக் காத்தது தமிழர் தலைவர் வீரமணிதான் என்பது துரோகியான உனக்குத் தெரியுமா?

பல லட்சங்கள் பெறுமானம் உள்ள டிரஸ்ட் சொத்துகளைக் கடந்த 30 வருடங்களில் பல கோடிகள் பெறுமானமுள்ளதாகப் பெருக்கிய பெருமை யாரைச் சேரும்?

உன்னைச் சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் பெரியார் சொத்தைச் சுரண்டி வாழ்ந்ததும், வாங்கிய கடனைக் கொடுக்காததும், கொடுத்த கடனைக் கேட்டபோது கோபப்பட்டதும், திட்டியதும் வழக்கு போட்டபிறகு, கோர்ட்டில் கடன் தொகையைக் கட்டியதும் உனக்கு மறந்து போய் விட்டதா? அல்லது நாங்கள் மறந்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டாயா?

எவனுக்கும் எதுவும் தராமல் இருந்த காரணத்தினாலேயே பார்ப்பானுக்கெல்லாம் பல்கலைக் கழகம் தந்து விட்டுக் கடைசியாகப் பெரியார் மணியம்மைப் பல்லைக் கழகம் வந்தது என்பது குப்பை மேட்டில் புரளும் சொறி நாயான உனக்குத் தெரிந்திருக்க வழியில்லைதான்!
திரைப்படங்களில் கூட அசல் சி.டி.களின் விலை 300 ரூபாய் என்றால் உன்னைப் போன்ற மொள்ளைமாரி தயார் செய்து விற்கும் சி.டி. 50 ரூபாய்க்கும் கிடைக்கும்தான். உனது தொழில் ரகசியமே அதுதான் என எங்களுக்குத் தெரியும். அதை நீ விளம்பரப்படுத்த வேண்டாமே!

தலையில் இருந்தவரைதான் மயிருக்கு எண்ணெயும் ஷாம்பூவும்! விழுந்த மயிரை எவனும் கையால்கூட எடுக்கமாட்டான். கழகத்தில் தொண்டனாகச் செயல்பட்ட யாரும் பாராட்டப் பெறுவார்கள். தான் என்ற தலைக்கனம் பிடித்துத் தறுதலையாக மாறிவிட்ட பின்னர் அதே மரியாதையை எவனும் எதிர்பார்க்கக் கூடாது. எனவே தலையின் இழிந்த மயிர் போனற் உன் தலைவன் பெருமையை எங்களிடம் காட்ட வேண்டாம். நாங்கள் பெரியாரின் தொண்டர்கள். புகழ், பாராட்டு எதற்காகவும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் நாய்கள் அல்ல! சுயவிளம்பர அரிப்பெடுத்து அலைவோரும் அல்ல!

முழுப் பூசணிக்காயை ஒரு பிடிச் சோற்றில் மறைக்க நினைக்கும் மடையனே! 25 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிக் கொடுத்துவிட்டது எப்படி உங்களுக்குக் கிடைக்கும்? நாங்கள் வெளியிட்ட சி.டி.களை வைத்து அச்சுப் போட்டுப் பணம் பார்க்க எண்ணிய உங்கள் நினைப்பில் மண் விழுந்துவிட்டது, சட்டப்படி என்பது புரிந்ததும் எண்ணெயில் விழுந்த எலி போலத் துடிக்கிறாயே! அறிவு நாணயமான செயலா நீங்கள் செய்வது?

"கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்.
தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்" என நாயைப் பற்றி ஒரு கவிஞன் எழுதினான். படித்திருக்கிறாயா? அப்படிப் பல நாய்கள் குரைத்த பட்டியலைப் போட்டு என்ன, என்ன என்று கேட்டுப் பெரியார்மீது ரொம்ப அக்கறை கொண்டவன்போல நடிக்கிறாயே! உன்னையும் அறியாமல் ஒன்றை ஒத்துக் கொண்டு விட்டாய்! பெரியாரைத் தூற்றி எழுதிய நாய்கள் எல்லாம் உனக்கு நண்பர்கள் என்று! நீயும் அந்த நாய்களோடு சேர்ந்த நாய்தான் என்பதை இந்தக் கடிதம் மூலம் காட்டிக் கொண்டுவிட்டாய்! சகவாச தோஷம் காரணமாக இருக்கலாம்! நீ! தொடக்கத்திலிருந்தே அப்படித்தானே! ஜென்மத்தோடு பிறந்தது - ஜோட்டாலடித்தாலும் போகாது! மெய்தான்.

அறிவைப் பரப்புவதில் அட்டியில்லை. ஆனால் அந்தப் போர்வையில், வாழும் வழியை வளப்படுத்திக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதைத்தான் - சட்டப்படிக்கான குற்றத்தைத்தான் - கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம்!

கருப்புத் துண்டு கூடப் போடாத பேரறிஞர் பிழைப்பில் நீங்கள் மண் அள்ளிப்போட, உங்களைக் குழியில் தள்ளி மண்ணோடு இட்டிட அவர் முயல நல்ல கொள்ளைச் சண்டைதான்! எச்சில் இலைச் சோற்றுக்குக் கடித்துக் கொள்ளும் நாய்ச் சண்டை! நல்ல வேடிக்கை!

சேத்துக்குளி ஷோக்காளிகள்!


கூட்டாளிகள் அனைவரின் படம் கிடைக்காததால், சேத்துக்குளியின் படம் மட்டும் இங்கே!
-----------------------------------------------------------------------------------------------
ரைக்கால் வேக்காட்டில் வெளியே எடுக்கப்பட்ட பண்டமாக ஒரு முண்டம் எதையெதையோ எழுதி வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதோ தந்தை பெரியாரைப் பற்றியும் அவர் கொள்கை பற்றியும் தெரிந்த மாதிரி எழுதியுள்ளது. தந்தை பெரியார் மறைந்த காலை இது எங்கிருந்தது?

மானமும் அறிவும் பெற்றவர்களாகத் தமிழர்களை மாற்றி உருவாக்குவதற்காக அவர் ஏற்படுத்தி வளர்த்த இயக்கத்தின் செயல்பாடுகளில் என்றும் வன்முறை தலைகாட்டியதே கிடையாது. இன எதிரிகளுக்குக்கூட அவர் என்றும் தீங்கு செய்தவரல்லவர். ஒரு சிலர் ஆர்வக் கோளாறில் 1950களின் பிற்பகுதியில் சிறு அறுப்பு சம்பவங்களை நடத்தியபோது கூடக் கண்டித்தவர் பெரியார்.

அவரின் வழியைப் பின்பற்றுபவராக இருந்தால் தோணி ஏறிக் கடலைக் கடப்பார்களா? கையூட்டு பெற்றுக் கொண்டு காட்டுக்குள் போவார்களா? பெரியார் கொள்கைகளையே அறியாது குண்டு வெடிப்பவர்கள் எல்லாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா?

மேட்டூர் பெரியார் பெருந்தொண்டர் கூமுசு மூலம் கழகத்திற்குக் கொண்டு வரப்பட்ட ஒருவர் கட்டுப்பாடு என்பதே இன்னதென்று தெரியாமல் வளர்ந்திருக்கிறாரே! திண்டுக்கல்லில் மன்னிப்பு கேட்கிறார் இனி செய்ய மாட்டேன் என்று! ஊருக்குத் திரும்பிய உடனே, மீண்டும் கட்டுப்பாடு மீறுகிறார். கழகத்தை விட்டே ஓடுகிறார். இவருக்கு எப்படி மூச்சுக் காற்றாகும், பெரியாரியக்கம்! இவருக்கு மூச்சு, பேச்சு எல்லாமே காசுதான்!

பர்வதம்மா பணம்தான் பொக்லைன்களாகவே கொட்டி விட்டதே! ஓடிப் போனவனயெல்லாம் நீக்கி விடும் வரலாறு இங்கே இல்லை. யாருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் சரியாக வேகாமல் வெளியே வந்தது எழுதக் கூடாது.

தந்தை பெரியார் கடைப்பிடித்த கொள்கையின் அடிப்படையில், இன மத வெறி கொண்டவர்களையும் அவர்களோடு ஒட்டுறவு கொண்டவர்களையும் வெறுத்து எதிர்த்துப் போரிடும் வழியில்தான் தமிழர் தலைவர் வீரமணி செயல்பட்டாரே தவிர, காட்டில் புதைத்து வைத்த கருவூலத்தைக் கருத்தில் கொண்டு செயல்பட்டவர்கள் போலப் போர் நடத்தியவரல்ல.

பெரியாரின் சொத்துகள் முழுமையும் அறக்கட்டளைகளாக்கப்பட்டு, அவையெல்லாம் சுமார் 45க்கு மேற்பட்ட கல்வி, மருத்துவ, சமுதாய அறப்பணி நிலையங்களாகச் செயல்பட்டு வருகின்றன எனும் நிலையில் அவற்றைக் காப்பதற்காகவே அந்த அறக்கட்டளையின் ஆயுள் காலச் செயலாளரான தமிழர் தலைவர் அந்தக் கடமையைச் சரியாகவே செய்து வருகிறார் என்று தன்னையும் அறியாமல் ஒத்துக் கொண்டு எழுதியுள்ள கருத்துக் குறை ஜென்மமே!

தந்தை பெரியாரின் தொடக்க கால கருத்துகள், எழுத்துகள், பேச்சுகள் 10 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் 30 தொகுதிகளாக வெளி வந்துள்ளன என்ற செய்தி தெரியுமா இந்த அரைக்கால் வேக்காட்டுக்கு? காலவாரியாக, தலைப்பு வாரியாகத் தொகுத்து வெளியிடும் பணியைத் திடல் திறம்படச் செய்து வருகிறது. 31ஆம் தொகுப்பு அச்சில் உள்ளது.

இவைதவிர, பெரியார் பல்வேறு தலைப்புகளில் பேசியவை, எழுதியவை அத்தனையும் சிறு சிறு நூல்களாகப் பல பத்துப் பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. (எ-டு) பெண் ஏன் அடிமையானாள்?, மனிதனும் மதமும், கடவுள், பிரகிருதிவாதம், தத்துவ விளக்கம், இனிவரும் உலகம் என எத்தனையோ சிறு வெளியீடுகள் தமிழர் தலைவர் வாழ்க்கை வரலாறு பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பும், பெரியாரின் பல நூல்களின் மொழி பெயர்ப்புகளும், செலக்டட் ஒர்க்ஸ் ஆப் பெரியார் என்ற 600 பக்க நூலாகப் பல பதிப்புகளும் வெளிவந்துள்ளதை இந்த குருட்டு முண்டங்கள் கேள்விப்பட்டதாவது உண்டா?

பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை இரண்டு பெரிய பஸ்கள் நாட்டின் எல்லா ஊர்களிலும் சென்று பெரியாரின் நூல்களை விற்று வருகின்றன என்பதும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகின்றன என்பதும் அறியாத இந்த முட்டாள், பெரியாரின் எழுத்துகள் செல்லரிக்கின்றன என எழுதுகிறதே! இந்த ஜந்துக்களைப் பற்றி என்ன நினைப்பது?

இத்தனை வசவுக்கும் என்ன காரணம்? இவர்களின் திருட்டுத் தொழிலுக்கும் ஆப்பு செருகிவிட்டார் என்பது தானே! தந்தை பெரியாரின் அறிவுசார் சொத்துகள் அவருக்கு - அவருடைய அறக்கட்டளைக்குச் சொந்தமானவை ஆயிற்றே! அவற்றை கண்டவனும் அச்சுபோட்டுக் காசு பார்க்க விடாமல் தடுத்திடும் வகையில் அறிவிப்பு வெளியிட்டதுதான் காரணம் என்பது சொல்லாமலே விளங்கிவிடும்!

குடிஅரசு 27 தொகுதிகளாக வெளியிடும் யோக்யதை இவன்களுக்கு எப்படி வந்தது? மொத்தக் குடிஅரசு தொகுப்புகளும் இவன்களிடம் இருக்கிறதா, அச்சு போடுவதற்கு? அதற்குக் கூட பிழைக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுத்தது தமிழர் தலைவர் வெளியிட்ட குறுந்தகடுகள் தானே! அதை வாங்கி அச்சுப் போட்டுக் காசு பார்த்துக் கொள்ளை அடிக்க வெளிநாட்டுத் தமிழர்களிடம் எல்லாம் பொய்யும் புனைசுருட்டும் கலந்து கடிதம் எழுதிய கண்ணியவான்கள்தானே இந்த முண்டமும் அதன் தலையும்?

தந்தை பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெரியாரின் நூல்களை வெளியிடுவதற்கும் பிழைப்புக்கு வழி தேடும் வகையில் மற்றொருவருக்கு உரிமையானதைத் திருடி வெளியிட்டுக் கொள்ளையடிக்க முயல்வதையும் ஒன்றாக வைத்துப் பார்ப்பது யோக்கியமான செயலா?

நாயின் தலையைவிட, சிங்கத்தின் வால் மரியாதையானது. தந்தை பெரியார் என்ற சிங்கத்தின் தொண்டர்கெல்லாம் தொண்டன் எனச் சொல்லிக் கொள்ளும் தமிழர் தலைவர். தாம் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்பைத் தம் தோழன் ஒருவரின் தோளுக்கு மாற்றி பெரியாரின் தொண்டன் என்பதை எண்பித்தார் என்பது ஓடுகாலிகளுக்குத் தெரியாது. என் கட்சித் தோழர்கள் துறவிக்கு மேலே என்ற தந்தையின் இலட்சிய வருணனைக்கு வடிவம் தந்து செயல்படுத்திய சீலம் தமிழர் தலைவர்!

எந்தச் சூழலில் தலைமைப் பொறுப்பு அவர்மீது திணிக்கப்பட்டது என்பதும், அதனை ஒப்புக் கொள்ள அவர் எந்த அளவுக்குத் தயங்கினார் என்பதும் அவரைச் சம்மதிக்க வைக்கப் பெரிதும் முயன்ற பெருமைக்கு உரியவர்கள் யார் யார் என்பதும், பொறுப்பைப் பதவி என்று நினைத்து அதனை அடைய எதையும் செய்து எப்படியும் வாழும் ஜன்மங்கள் அறியாதவை. அவர்களுக்கு அறிவிப்பதும் அவசியமானது அல்ல!

எவனோ தூக்குமாட்டிக் கொண்டு செத்தான் என்பதற்காக இருப்பவர்களையெல்லாம் அதையே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்களின் செயல். சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிப்பவர்கள் நான் (சின்ன) மீனை இழந்தேன் எனக் கித்தாப்பு பேசக் கூடாது. பெரிய மீன் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டதே என்பதற்காகக் கண்டதையும் எழுதக் கூடாது.

திருட்டுத் தொழில் அம்பலமாகிவிட்டதற்காக, ஆத்திரம் ஏற்படுவதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், அதனையே பெருமை என்று வருணித்துக் கொள்ளும் நார்சிசத் தன்மையை நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பெரியாரிடம் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு, திருப்பித் தராமல், அமுக்கிக் கொள்ளப் பார்த்தவன் கூட, சட்டபூர்வ நடவடிக்கைக்காகப் பெருமை பட முடியுமா?

பெரியாரையும் தெரியாமல் அவரின் கொள்கை இன்னதென்றும் புரிந்து கொள்ளாமல் வெறுமனே கருப்புச் சொக்காயை மாட்டிக் கொண்டு, கிணுகிணு என மணி ஆட்டிக் கொண்டு திருடனுக்குத் துணை போகக் கூடாது. தூது என்ற போர்வையில், சூது செய்து பணம் சுருட்டும் தொழிலில் ஈடுபட்டவன் பிறரை விமர்சிக்கும் யோக்கியதை பெற்றவன் என யாரும் கூற மாட்டார்கள்.

குடிஅரசு தொகுப்புகளைக் குறுந்தகடுகளாக்கி 19 குறுந்தகடுகளை வெளியிட்டது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்தான்.
இதை வாங்கி, அச்சுப் போட்டுப் பணம் பண்ணப் பார்க்கும் சேத்துக்குளி ஷோக்காளிகள் வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதால் பதைக்கிறார்கள். பண்பாடு இல்லாமல் திட்டித் தீர்க்கிறார்கள். நாய்கள் குரைப்பதால் ஒட்டகங்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது; அவை எடுத்த காரியத்தை முடித்தே தீரும்.

5 ஆயிரம் பக்கங்களை எழுதிக் கொடுத்து விட்டதாகக் கொக்கரிக்கும் குடிகேடர்களே! 10 ஆயிரம் பக்கங்களுக்குப் பெரியாரின் கருத்துகள் தலைப்பு வாரியாக இதுவரை 30 தொகுப்புகள் வந்திருப்பதை வசதியாக மறைத்தது ஏனோ?

நாங்கள் (தி.க.) ஒன்றுமே செய்யாதது போலப் பொய்யை மூட்டை மூட்டையாக மேற்குக் காவேரியும் கிழக்குக் காவேரியும் கூட்டுச் சேர்ந்து விற்கும் கயவாளித் தனத்தைத் தோலுரிப்போம். சந்திக்குச் சந்தி சந்திப்போம்!

அக்கப்போர் பத்திரிகைகளின் தயவை நாடும் பொச்சரிப்பும் பொறாமையும் எங்கே பொங்கி எங்கே வழிகிறது என்பதை எடுத்து வைப்போம்.
அடக்கிக் கொள்: இல்லையேல் அறுத்துவிடுவோம்.