Saturday, August 23, 2008

ஜென்மத்தோடு பிறந்தது - ஜோட்டாலடித்தாலும் போகாது!

"அறிஞர்கள் தத்துவங்களை விவாதிக்கிறார்கள்.
சாதாரணமானவர்கள் சம்பவங்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.
மட்டமானவர்கள் மட்டுமே மனிதர்களைப் பற்றி விமர்சிக்கிறார்கள்"என்று சீனப் பழமொழி கூறுகிறது. அப்படிப்பட்ட வகையில் மட்டமான ஈனப் பிறவி ஒன்று ஏதேதோ எழுதியுள்ளது.

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு உண்மை தெரியும் என்றாலும் புழுதியைப் துடைக்க வேண்டியது நல்லதுதானே!

பஞ்சபாண்டவ புத்திரனான இந்த ஆளுக்கு ஞான குருவாக இருந்த ஒருவன் பெரியாரின் அறக்கட்டளை பற்றி மொட்டைக் கடுதாசி எழுதிப் போட்டான். இவன்களைச் சேர்ந்த இன்னொரு சதிகாரக் கூட்டம் பெரியார் எனும் அடைமொழிக்கு ஆலாய்ப் பிறந்த நாதாரி ஒருவன் மூலமும் புகார் மனு கொடுத்து பல லட்ச ரூபாய் வருமான வரி கட்டு எனப் பார்ப்பனர்கள் உத்தரவு போட்டனர். அதை எதிர்த்து அப்பீல் செய்து சுமார் 1 கோடி ரூபாய் வரியை ரத்து செய்து டிரஸ்டைக் காத்தது தமிழர் தலைவர் வீரமணிதான் என்பது துரோகியான உனக்குத் தெரியுமா?

பல லட்சங்கள் பெறுமானம் உள்ள டிரஸ்ட் சொத்துகளைக் கடந்த 30 வருடங்களில் பல கோடிகள் பெறுமானமுள்ளதாகப் பெருக்கிய பெருமை யாரைச் சேரும்?

உன்னைச் சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் பெரியார் சொத்தைச் சுரண்டி வாழ்ந்ததும், வாங்கிய கடனைக் கொடுக்காததும், கொடுத்த கடனைக் கேட்டபோது கோபப்பட்டதும், திட்டியதும் வழக்கு போட்டபிறகு, கோர்ட்டில் கடன் தொகையைக் கட்டியதும் உனக்கு மறந்து போய் விட்டதா? அல்லது நாங்கள் மறந்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டாயா?

எவனுக்கும் எதுவும் தராமல் இருந்த காரணத்தினாலேயே பார்ப்பானுக்கெல்லாம் பல்கலைக் கழகம் தந்து விட்டுக் கடைசியாகப் பெரியார் மணியம்மைப் பல்லைக் கழகம் வந்தது என்பது குப்பை மேட்டில் புரளும் சொறி நாயான உனக்குத் தெரிந்திருக்க வழியில்லைதான்!
திரைப்படங்களில் கூட அசல் சி.டி.களின் விலை 300 ரூபாய் என்றால் உன்னைப் போன்ற மொள்ளைமாரி தயார் செய்து விற்கும் சி.டி. 50 ரூபாய்க்கும் கிடைக்கும்தான். உனது தொழில் ரகசியமே அதுதான் என எங்களுக்குத் தெரியும். அதை நீ விளம்பரப்படுத்த வேண்டாமே!

தலையில் இருந்தவரைதான் மயிருக்கு எண்ணெயும் ஷாம்பூவும்! விழுந்த மயிரை எவனும் கையால்கூட எடுக்கமாட்டான். கழகத்தில் தொண்டனாகச் செயல்பட்ட யாரும் பாராட்டப் பெறுவார்கள். தான் என்ற தலைக்கனம் பிடித்துத் தறுதலையாக மாறிவிட்ட பின்னர் அதே மரியாதையை எவனும் எதிர்பார்க்கக் கூடாது. எனவே தலையின் இழிந்த மயிர் போனற் உன் தலைவன் பெருமையை எங்களிடம் காட்ட வேண்டாம். நாங்கள் பெரியாரின் தொண்டர்கள். புகழ், பாராட்டு எதற்காகவும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் நாய்கள் அல்ல! சுயவிளம்பர அரிப்பெடுத்து அலைவோரும் அல்ல!

முழுப் பூசணிக்காயை ஒரு பிடிச் சோற்றில் மறைக்க நினைக்கும் மடையனே! 25 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிக் கொடுத்துவிட்டது எப்படி உங்களுக்குக் கிடைக்கும்? நாங்கள் வெளியிட்ட சி.டி.களை வைத்து அச்சுப் போட்டுப் பணம் பார்க்க எண்ணிய உங்கள் நினைப்பில் மண் விழுந்துவிட்டது, சட்டப்படி என்பது புரிந்ததும் எண்ணெயில் விழுந்த எலி போலத் துடிக்கிறாயே! அறிவு நாணயமான செயலா நீங்கள் செய்வது?

"கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்.
தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்" என நாயைப் பற்றி ஒரு கவிஞன் எழுதினான். படித்திருக்கிறாயா? அப்படிப் பல நாய்கள் குரைத்த பட்டியலைப் போட்டு என்ன, என்ன என்று கேட்டுப் பெரியார்மீது ரொம்ப அக்கறை கொண்டவன்போல நடிக்கிறாயே! உன்னையும் அறியாமல் ஒன்றை ஒத்துக் கொண்டு விட்டாய்! பெரியாரைத் தூற்றி எழுதிய நாய்கள் எல்லாம் உனக்கு நண்பர்கள் என்று! நீயும் அந்த நாய்களோடு சேர்ந்த நாய்தான் என்பதை இந்தக் கடிதம் மூலம் காட்டிக் கொண்டுவிட்டாய்! சகவாச தோஷம் காரணமாக இருக்கலாம்! நீ! தொடக்கத்திலிருந்தே அப்படித்தானே! ஜென்மத்தோடு பிறந்தது - ஜோட்டாலடித்தாலும் போகாது! மெய்தான்.

அறிவைப் பரப்புவதில் அட்டியில்லை. ஆனால் அந்தப் போர்வையில், வாழும் வழியை வளப்படுத்திக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதைத்தான் - சட்டப்படிக்கான குற்றத்தைத்தான் - கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம்!

கருப்புத் துண்டு கூடப் போடாத பேரறிஞர் பிழைப்பில் நீங்கள் மண் அள்ளிப்போட, உங்களைக் குழியில் தள்ளி மண்ணோடு இட்டிட அவர் முயல நல்ல கொள்ளைச் சண்டைதான்! எச்சில் இலைச் சோற்றுக்குக் கடித்துக் கொள்ளும் நாய்ச் சண்டை! நல்ல வேடிக்கை!

No comments: